என்னைப் பின்பற்றி வா Tucson, Arizona, USA 63-0601 1நல்லது, அப்படியல்ல, அது பெக்கி பிறப்பதற்கு முன்பு நடந்த காரியமாகும். ஆகையால் நான் - நான், 'நல்லது, அது உங்களுக்குத் தெரியும்...' என்று எண்ணினேன். நான் - நான் வெறுமனே பத்து சென்ட் காசுகள் (dime) பெறுமானமுள்ள ஒரு கிண்ணம் அளவேயான ஓட்ஸ் ஆகாரத்தைத் தான் புசித்தேன். நல்லது, நான் வெறுமனே... அவர்கள் என்னுடைய சாப்பாட்டுச் சீட்டை என்னிடம் கொடுத்தனர், நான் அதில் கையொப்பமிட்டேன், நீங்கள் பாருங்கள், நான் அதற்கான கட்டணத்தைச் செலுத்தினேன், அவர்கள் அதை என்னிடம் திரும்பக் கொடுத்தனர், நானோ அதைத் திரும்பக் கொடுத்து விட்டேன், ஏனென்றால் நான் ஒரு செலவு கணக்கை (expense account) வைத்திருந்தேன். ஒரு நாள் நாங்கள் ரோந்து செல்லும் ஒரு - ஒரு காவல்துறை அதிகாரியை சந்தித்தோம். 'என்னே,' அவர்கள், 'இவ்விதமான ஒன்றை திருப்பிக் கொடுக்கும் இந்த நட்டு யார்?' என்று கேட்டனர். பாருங்கள்? அந்தத் தலைவர், 'ஒரு வேளைக்கான காலை உணவுக்கு பத்து சென்ட்டுகளா?' என்று கேட்டார், நீங்கள் அறிவீர்கள். ஆகையால் மற்ற மனிதர்களுடைய பார்வையில் அது மிகவும் மலிவானதாக காணப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களில் சிலரோ ஒரு டாலர் பணத்தை கொடுத்தனர், பாருங்கள்; பகல் உணவுக்காக இரண்டு டாலர்கள். நானோ அது சரியாக எவ்வளவு பெறுமானமுள்ளதாக இருந்ததோ அவ்வளவு பணத்தையே கொடுத்தேன். 2நல்லது, நான், 'நல்லது, இப்பொழுது, நான் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நான் வெறுமனே பத்து சென்ட்டுகள் பெறுமானமுள்ள ஆகாரத்தைத் தானே சாப்பிட்டேன், அப்படியானால் நான் என்ன செய்வது?' என்று கேட்டேன். உதவி மேற்பார்வையாளராயிருந்த திரு. ஃபீல்ட்ஸ் அவர்கள், 'பில்லி, நீர் எப்படியும் குறைந்தது ஒரு டாலர் பணத்தையாவது செலுத்த வேண்டும். அதைத்தானே மற்றவர்களும் செலுத்துகிறார்கள். அந்த கூட்டம் ஜனங்களைப் போல, நீரும் அதையே செய்தாக வேண்டும்' என்று கூறினார். 'நல்லது,' நான், 'ஒரு கிண்ணம் ஓட்ஸ் ஆகாரத்தைத் தவிர வேறொன்றையும் நான் - நான் ஒருபோதும் சாப்பிடவில்லையே, அதற்காகத்தான் நான் கட்டணம் செலுத்தினேன்' என்றேன். 'ஓ, அதைச் செய்யாதீர், ஒருபோதும் அதைச் செய்ய வேண்டாம்' என்றார். நல்லது, பிறகு, 'நான் அதனோடு என்ன செய்யலாம்?' என்று யோசித்தேன். அதன்பிறகு நான் காலை உணவுக்காக 50 சென்ட்கள் செலுத்தினேன். பிறகு அதிலிருந்து 40 சென்ட்களை எடுத்து, நான் எதையாவது செலவு செய்ய விரும்பினால், அதை வீதியிலுள்ள சில குழந்தைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்; சில குழந்தைகள் கொஞ்சம் பழைய சான்ட்விச்சையும், சான்ட்விச்சையும் கூட விரும்பி அதற்காக எதிர்நோக்கியிருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். நல்லது, நான் ஒருக்கால்... என்று நினைத்தேன். சரி, அது அவ்விதமாக என்னிடம் பேசிக் கொண்டிருக்கிற நண்பர்கள் கூட்டமாய் உள்ளது, அதுவே தான். அது நண்பர்கள் கூட்டத்திலிருந்து வந்த ஒரு மனிதன். ஆகையால், 'ஒருக்கால் நான் தவறான ஏதோவொன்றை செய்திருக்கலாம்' என்று நினைத்தேன். 3எனவே இங்கே சமீபத்தில், ஒரு ரோந்து அதிகாரியோடு... இப்பொழுது அவர்கள் ஹெலிகாப்டர்களில் ரோந்து செல்கிறார்கள், நீங்கள் பாருங்கள். எனவே அவர் என் அருகில் வந்து நின்று, 'சகோதரன் பிரன்ஹாமே, பதில் கூறுங்கள், இந்த மரம் வளர்ந்து கொண்டிருக்கிறதே' என்றார். நான், 'ஆமாம். பிள்ளைகள் அந்த மரத்தின் கீழே விளையாடுகிறார்கள்' என்றேன். 'நாம் இதன் கொப்புகளை வெட்டி விடுவோமா?' என்று கேட்டார். நான், 'சரி, ஆனால் இதை அடிப்பாகம் வரை வெட்ட வேண்டாம். புரிகிறதா?' என்று கூறினேன். அவர், 'நல்லது, நாங்கள் அதை வெட்டிவிட விரும்புகிறோம். அதற்கான கிரயத்தை உமக்கு செலுத்தி விடுவோம்' என்று கூறினார். நான், 'வேண்டாம். வேண்டாம். நீங்கள் அதை வெட்ட எனக்கு விருப்பமில்லை' என்று கூறினேன். நல்லது, அதை வெட்டுவதற்கான சட்ட விதிகளையும் கூட நான் அறிந்திருந்தேன், ஏனென்றால் நான் 7 வருடங்களாக அங்கேயே தங்கியிருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான், 'வேண்டாம்' என்றேன். நான், 'அதை அடிப்பாகம் வரை வெட்டி விட எனக்கு விருப்பமில்லை, ஆனால் நீங்கள் அதன் கொப்புகளை வெட்டி விடலாம்' என்றேன். தொடர்ந்து நான், 'நான் - நான் தொடர்ந்து அதன் கொப்புகளை வெட்டி வருகிறேன், ஆனால் நீங்கள் - நீங்கள் விரும்பினால் அதன் கொப்புகளை வெட்டலாம். நானும், சகோதரன் உட்ஸ்-ம் நானும் அதன் கொப்புகளை வெட்டி விட திட்டமிட்டுள்ளோம். இங்கேயிருக்கும் இந்த மற்ற எல்லா மரங்களுடைய கொப்புகளையும் நாங்கள் வெட்டி விடுகிறோம். ஆனால் பிள்ளைகளின் நிமித்தமாக அந்த மரம் வெட்டப்படாமல் அங்கேயே இருக்கவே நாங்கள் விரும்புகிறோம், ஜோவும் அவர்களும், உமக்குத் தெரியும், சிறு பிள்ளைகள் அந்த மரத்தின் கீழே விளையாடுகிறார்கள்' என்றேன். 4நான் தொலைதூர பிரயாணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். நான் திரும்பி வந்தபோது, அந்த மரம் கீழ்வரை அறுக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. ஓ, அந்த மரத்தை வெட்டுவதற்காக நண்பர்கள் கூட்டத்திடம் விடுத்து வந்த வேண்டுகோள் என்னவொரு வேண்டுகோளாக இருந்து வந்துள்ளது, நீங்கள் பாருங்கள், நீங்கள் பாருங்கள். எனவே நான், 'இப்பொழுது, கர்த்தாவே, நான் அதை வெட்ட வேண்டும் என்று சொல்லக் கூட இல்லையே' என்று நினைத்தேன். பாருங்கள்? நான் - நான் அதன் பேரில் எதையாவது கொண்டிருப்பேனாகில், சில சமயங்களில் அதை நான் திரும்பக் கொடுத்து விடுகிறேன், 10 சென்ட்டுகள் (dime) பெறுமானமுள்ள ஆகாரத்தை மாத்திரமே சாப்பிட்டு விட்டு, 50 சென்ட்டுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளது. பாருங்கள்? நான், 'அங்கே அதன்பேரில் ஏதோவொன்று இருக்குமானால், அவர்களோடு சிநேகமாக இருக்கவே முயற்சி செய்கிறேன், பாருங்கள், நான் - நான் அதைக் கொடுத்து விட்டேன், நீங்கள் பாருங்கள். நான்...' என்றேன். அதன்பிறகு பொதுச் சேவை நிறுவனத்தில் (பணிபுரிவதைக்) குறித்து கனவு காணுவது நின்று போயிற்று, பாருங்கள், ஏனென்றால் அங்கே அதற்குப் பின்னால் ஏதோவொன்று இருந்திருக்க வேண்டும்.நாம் என்ன செய்கிறோம் என்பதை நாம் கவனித்தாக வேண்டும். (ஏனென்றால்) நாம் அதை ஏதோவொரு நாளில் சந்திக்க வேண்டியுள்ளது. 5வாலிப பிள்ளைகள் இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். ட்ரூடி, இன்று உன்னுடைய தாயார் மற்றவர்களோடு மேலே இருந்தார்கள். அது உனக்குத் தெரியாது, உனக்கு அது தெரிந்திருக்கவில்லை என்று ஊகிக்கிறேன். இது ஒருவகையில் வியப்பூட்டுவதாயுள்ளதை என்னால் காண முடிகிறது. உங்களுக்குப் பட்டமளிக்க (graduate) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் இங்கே ஒன்றாக சேர்ந்து இப்பிரயாணத்தில் இருக்கிறோம். நான் இப்பொழுது இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, உடனடியாக (வேறு) ஒரு கூட்டத்திற்குப் போகப் போகிறேன். அதன்பிறகு நாங்கள் வீட்டிற்குப் போகப் போகிறோம். 6உங்கள் எல்லாரோடும் பேசுவதற்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக இது உள்ளது என்று நான் எண்ணினேன், அதன்பிறகு மேலும் உங்களுடைய பட்டமளிப்பு நடைபெறுவதற்கு முன்பு சிறு வாலிப பிள்ளைகளிடம் சிறிது பேசுவது நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். வேதாகமத்திலிருந்து ஒரு வசனத்தை வாசித்து விட்டு, என் இருதயத்திலிருந்து ஏறக்குறைய 10 நிமிடங்கள் உங்களோடு பேசப் போகிறேன். (பின்பு) உங்களுடைய பாதையை விட்டு வெளியே போய் விடுவேன். புரிகிறதா? 7நான் வாலிப பிள்ளைகளிடம் பேசுவதற்கு முன்பு, நான் சற்றே ஒரு நிமிடம் வயது வந்தவர்களாகிய உங்கள் எல்லோருடனும் கூட பேச விரும்புகிறேன். அது இப்பொழுது ஒருக்கால் விறுவிறுப்பான உற்சாகமூட்டுகிற அனுபவமாக இருக்கலாம், அது அவ்வாறு தான் இருந்து வந்துள்ளது. ஆனால் நான் தேவனிடமிருந்து கற்றுக் கொண்டுள்ள அனுபவங்களை, நான் இங்கே இருந்தது முதற்கொண்டு கர்த்தரிடமிருந்து கற்றுக் கொண்டவைகளுக்கு (மாற்றாக) 10,000 டாலர்கள் பணம் தந்தாலும், அப்பணத்தைப் பெற்றுக் கொள்ள மாட்டேன். சர்வவல்லவருடைய கட்டளைக்கு நான் முழுவதுமாக கீழ்ப்படியும்படியான ஒரு நிலைக்கு வந்துள்ளேன் என்று மெய்யாகவே நான் நம்புகிறேன், நான் அவ்விதமாகவே தொடர்ந்து எப்பொழுதும் இருப்பேன் என்று நான் - நான் நம்புகிறேன். மேலும் அங்கே ஒரு... ஒரு காரியம் என்னவெனில், நான் ஒரு தரிசனத்தின் மூலமாக வந்தபோது, நான் இங்கே டூசானுக்கு மேலே நின்றிருந்தேன், அப்போது ஒரு - ஒரு - ஒரு வெடிச்சத்தம் கேட்டது. நல்லது, அந்த வெடிச்சத்தம் கேட்டபோது, சகோதரன் ஃபிரட் அவர்களும் அங்கேயிருந்தார். அவர்கள் இப்பொழுது அப்படத்தை புகைப்படம் எடுத்துள்ளனர், வானத்திலிருந்த அந்த காட்சியைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். நான் அதைக் குறித்து அதிகமாக எண்ணிப்பார்க்கவில்லை, நான் அதை ஒருபோதும் கவனிக்கவேயில்லை. இப்படியிருக்க அன்றொரு நாள் எவ்வாறாயினும் அது என் மனதில் ஆழமாகப் பதியத் தொடங்கியது. சகோதரன் நார்மன், இங்கேயிருக்கும் நார்மாவின் தகப்பனார் என்னிடம், 'நீங்கள் இதைக் கவனித்தீர்களா?' என்று கேட்டார். 8நான் அதைக் கவனித்துப் பார்த்த போது, அங்கே அந்தப் படத்தில் தேவ தூதர்கள் எவ்வளவு கூடுமோ அவ்வளவு தெளிவாக இருந்தனர். பாருங்கள்? அது எப்போது சம்பவித்தது என்று காணும்படி நான் நோக்கிப் பார்த்தேன், அது ஏறக்குறைய நான் அங்கே இருந்த நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு அல்லது ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு நடந்த காரியமாகும். அது எங்கே நடந்தது என்று கவனித்தேன், 'ஃபிளாக்ஸ்டாப்பிற்கு வடகிழக்கில், அல்லது பிரஸ்காட்டில், அது ஃபிளாக்ஸ்டாப்பிற்குக் கீழே இருக்கிறது.' நல்லது, அங்கே தான் நாங்கள் இருந்தோம், பாருங்கள், அது மிகச் சரியாக இருந்தது. 'இருபத்தாறு மைல்கள் உயரம்.' ஏன், நீராவியோ, ஈரப்பதமோ, எவ்வகையிலான மூடுபனியோ அல்லது எதுவுமோ நான்கு, நான்கு அல்லது ஐந்து மைல்கள் உயரத்திற்குமேல் போக முடியாது, நீங்கள் பாருங்கள். 19000 உயரத்தில் விமானங்கள் பறக்கின்றன. எல்லா மேகங்களுக்கும் மேலாக அது எழும்பி (பறக்க) வேண்டியுள்ளது, நீங்கள் பாருங்கள். 19000 என்பது ஏறக்குறைய 4 மைல்கள் உயரமாகும். நீங்கள் அந்தப் படத்தைக் கவனித்துப் பார்ப்பீர்களானால், அது 26 மைல்கள் உயரத்திலும், 30 மைல்கள் குறுக்காகவும், கூர்நுனிக் கோபுர வடிவிலும் இருந்தது. 9நான் உங்களிடம் கூறினபடி, வலது பக்கத்தில் இருந்த தூதன் முதன்மையான தனிச்சிறப்புமிக்க தூதனாக இருந்ததைக் கவனித்தேன். அவன் தன் மார்பை முன்தள்ளினவனாகவும், தனக்கு பிறகே செட்டைகளைக் கொண்டுள்ளவனாகவும் அவன் வந்து கொண்டிருந்தான், அது இருந்த விதமாகவே மிகவும் சரியாக இருக்கிறது. அவர்கள் முதலாவது... சமயத்தில், நான் அதை ஒருபோதும் கவனிக்கவேயில்லை. அங்கே அநேக காரியங்கள் இருக்கின்றன. அன்றொரு நாள் நான் சாலையில் வந்து கொண்டிருந்த போது, அங்கே ஏதோவொன்று சம்பவித்தது, நான் - நான் செய்தாக வேண்டிய காரியத்தைக் குறித்து அது என்னிடம் பேசினது. என்னுடைய செய்தி அதை - அதைப் பற்றியதல்ல. ஒரு சமயத்தில், லியோ மெர்ஸியர், 'சகோதரன் பிரன்ஹாமே, இதற்குப் பிறகு அந்த நேரம் வரும்' என்று கூறினார்,... ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்பு, ஒருவேளை ஏழு வருடங்கள் இருக்கலாம், அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, கர்த்தர் உம்முடைய ஊழியத்தை மாற்றப் போகிறார். அவர் அவ்வாறு செய்கிற போது, நீர் அநேகமாக மருத்துவமனைகளில் நின்று கொண்டு, அந்தப் படுக்கைகளிலும் மற்றும் காரியங்களிலும் இருக்கிற அவர்களைப் பார்த்து பேசுவீர்' என்றார். சகோதரன் லியோ அதைக் குறித்து உத்தமமாக இருக்கவே முயற்சித்தார் என்பதை நான் நம்பின போதிலும், அது சரியாக ஒலிக்கவில்லை. 10ஆனால் அது சரியாக ஒலிக்கவில்லை, ஏனென்றால், பாருங்கள், நம்முடைய கர்த்தராகிய இயேசு ஒருபோதும் அதைச் செய்யவில்லை. புரிகிறதா? அவர் மருத்துவமனைகளுக்குள் போனார். அந்த மருத்துவமனையிலிருந்த ஒருவன் அங்கே இருந்தான். அது வேதாகமத்தில் எங்கேயுள்ளது என்று நினைவிருக்கிறதா? பெதஸ்தா குளம். பெருந்திரளான செயலிழந்த உறுப்புக்களைக் கொண்டிருந்த ஜனங்கள் அங்கே படுத்திருந்தனர், ஊனமுற்றவர்களும், சப்பாணிகளும், குருடர்களும், சூம்பின உறுப்புடையவர்களும் அங்கே படுத்துக் கொண்டு அந்தத் தூதனுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். இப்பொழுது, அது ஒரு ஆவிக்குரிய மருத்துவமனையாக இருந்தது, அங்கே ஜனங்கள் தெய்வீக சுகமளித்தலுக்காகக் காத்திருந்தனர். இதோ தெய்வீக சுகமளிப்பவர் தாமே உள்ளே வந்து, ஒருவனை சுகப்படுத்தி விட்டு வெளியே நடந்து சென்று விட்டார். எனவே அதைக் காட்டிலும் பெரிய எந்தவொரு சாவுக்குரிய மனிதனையோ, அல்லது வரப்போகும் ஒரு ஊழியத்தையோ உங்களால் எதிர்பார்க்க முடியாது. புரிகிறதா? என்னால் அதனோடு இணங்கிப் போக முடியாது. ஆனால் நான் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்க்கத் தொடங்கின போது, பரிசுத்த ஆவியானவர் என்மேல் வந்தார். எனக்கு ஒரு எழுதுகோல் (pen) வேண்டுமென்று நான் லியோவிடம் கேட்டேன். என்னிடம் ஒரு துண்டு காகிதம் இருந்தது, நான் அதை எழுதினேன். அது எங்கேயிருக்கிறது என்று நீங்கள் (அறிய விரும்பினால்), அது இன்று அவருடைய ட்ரெயிலர் வண்டியில் உள்ளது. அது அந்தப் பழைய அலுமினிய ட்ரெயிலர் வண்டியில் இருக்கிறது, அங்கே தான் துணிமணிகளை ஏற்றி வைத்திருக்கிறேன். நீங்கள் அப்படியே வாசலுக்குள் போகும் போது, அங்கே வலது பக்கத்தில் ஒரு அலமாரியில் அது இருக்கிறது, அந்த டரெயிலர் வண்டியின் வலது பக்கத்தில் அது இருக்கிறது. அது அங்கே கீழே இருக்கிறது. நான் அதை அங்கே மேலே தான் வைத்தேன். 'ஏதோவொரு நாளில் உன்னால் இதை விட்டு விலகி வர முடியும். 'தேவன் ஒருபோதும் ஊழியத்தை மாற்ற மாட்டார், ஆனால் அந்த ஊழியத்தோடு அம்மனிதனைத் தான் மாற்றுவார்'' என்று கூறினது. செய்யப்பட வேண்டிய காரியம் அதுதான். பாருங்கள், என்ன செய்ய வேண்டுமென்பதை நான் - நான் அறிவேன், ஆனால் என்னால் - என்னால் - என்னால் முடியாது, நான் இப்பொழுது இருக்கிற நிலையில் என்னால் அதைச் செய்ய முடியாது. ஏனென்றால், நான்... ஏதோவொன்று எனக்குள் சம்பவித்தாக வேண்டும், அதைச் செய்யும்படியாக தேவன் தேவைப்படுகிறார். 11நாங்கள் வீட்டிற்கு திரும்பிப் போக உத்தேசித்துள்ளோம். பிள்ளைகள் வீட்டைப் பிரிந்த துயரத்தில் இருக்கின்றனர், அவர்கள் யாவரும் திரும்பிப் போக விரும்புகின்றனர். எனவே கர்த்தருக்குச் சித்தமானால், நான் அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளேன், ஒருக்கால் சனிக்கிழமை ஆராதனைக்குப் பிறகு திரும்பிப் போவேன். அங்கிருந்து (எங்கு போக வேண்டும்) என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் அறிவேன், ஜனங்கள் பட்சமாக என்னை அனுதாபம் கொள்ளச் செய்வதற்கு, எனக்குள் ஏதோவொன்று சம்பவித்த உடனே, நான் இப்பொழுது செய்வதிலிருந்து அது வித்தியாசமாய் இருக்கும். நான் அந்த ஜனங்களைப் புறக்கணித்திருந்தேன், பாருங்கள், நான் - நான் அவர்களோடு இதற்கு மேலும் எந்த தொடர்பும் கொள்ள விரும்பவில்லை. நான் என்ன கூறுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும், நான் 'ரிக்கி, ரிக்கெட்டா' என்று அழைத்த அந்த (ஜனங்களைத் தான்) கூறுகிறேன், அவர்களிடம் இருந்த அக்காரியங்கள் அவர்களிடமே இருந்தன. நான் முழு உத்தமத்தோடும் பிரசங்கம் பண்ணினேன், தேவன் ஒவ்வொரு விதத்திலும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். 'அவர்கள் அதை விசுவாசிக்க விரும்பாவிட்டால், ஏன், அவர்களைத் தனியே விட்டு விடுங்கள்.' வரப்போகிற இந்த இலையுதிர் காலத்தில் நான் பட் அவர்களோடு சேர்ந்து கொள்வதற்காக நான் அங்கே மேலே போய்க் கொண்டிருந்தேன். அங்கே மேலே அவர்களை ஒன்றாகக் கூடும்படி செய்யத் தொடங்கினேன். அந்த வனாந்தரத்திலேயே காத்திருந்து, என்னுடைய மயிரையும் தாடியையும் வளர விடுவேன். நான் எங்காவது போகும்படி கர்த்தர் விரும்புவாரானால், அவர் என்னிடம் பேசுவார், நான் கீழே சென்று அதைக் கூறுவேன். அன்றொரு நாள் நான் சாலையில் வந்து கொண்டிருந்த போது அவர் என்னை நிறுத்தினார். எங்கே என்று நான் பார்த்தேன்... நான் எங்கு வந்து கொண்டிருந்தேன் என்று பார்த்தேன். நான் - நான் இப்பொழுது மற்ற ஏதோவொன்றை நோக்கிய என் பாதையில் இருந்தேன். நான் வீட்டை அடையும்போது, வெளிப்படையாக பேசுதல் என்று நாம் அழைக்கிறதை பேசுவேன் என்று நினைத்தேன், ஒருவேளை அது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படலாம், அப்போது ஏன் இந்த திடீர் மாற்றம் என்று பொதுமக்கள் அறிந்து கொள்வார்கள். 12இப்பொழுது, பிள்ளைகளாகிய நீங்கள், நாம் சற்றே... நாம் ஒரு சிறு ஜெபம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே, இங்கே வாலிபரும், வயோதிபரும், நடுத்தர வயதினருமாகிய நாங்கள் கூடி வந்திருப்பதை அறியும் இந்நேரத்திற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் உம்மைக் குறித்தும் நித்திய ஜீவன் சம்பந்தமான இக்காரியங்களைக் குறித்தும் பேசும்படியாக ஒருவிசை கூட கூடி வந்திருக்கிறோம். இந்த வாலிப வயதினர் இன்றிரவு இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள், அவர்களில் சிலர் பட்டம் பெறுகிறார்கள், சிலர் ஏற்கனவே பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் கர்த்தாவே, டூசானுக்கு வடக்கே அந்த கர்த்தருடைய தூதர்கள் கீழே இறங்கி வந்த போது, அங்கே மேலே அந்த மலையில் சம்பவித்த பெரிய அதிர்ச்சி, அல்லது பெரிய வெடிப்பு நடப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு சற்று முன்பு ஏதோவொன்று சம்பவித்தது என்று உணருகிறேன். என்ன சொல்லப்பட்டது என்பதை நான் நினைவுகூருகிறேன், குறிப்பாக வாலிப ஜனங்களைக் குறித்து என்ன சொல்லப்பட்டது என்பதை. கர்த்தாவே, அதை புரிந்து கொள்ள எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் உம்மிடம் ஜெபிக்கிறேன். இன்றிரவு இந்த வாலிப ஜனங்களின் பிரயாணத்தினூடாக அவர்களுக்கு உதவி செய்யும் ஏதோவொன்றை அவர்களுக்குக் கூறும்படி நான் திறனுடையவனாய் இருப்பேனாக. கர்த்தாவே, இந்நேரத்தில் எங்கள் எல்லாருக்கும் உதவி அவசியமாயுள்ளது. 13எங்களை ஒருமித்து ஆசீர்வதியும். எங்கள் பாவங்களை மன்னியும். நாங்கள் இங்கே இருந்தது முதற்கொண்டு உமக்கு கோபமூட்டுகிற எதையாவது நாங்கள் செய்திருந்தால், அதற்காக நீர் எங்களை மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாளைய தினத்தைக் குறித்து எங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை - இல்லை என்று நாங்கள் இன்று உணருகிறோம். நாளைய தினம் என்ன கொண்டு வரும் என்று எங்களுக்குத் தெரியாது. நாளைய தினத்தை சந்திப்பதற்காக இன்றே நாங்கள் ஆயத்தமாக இருந்தாக வேண்டும். மேலும் பிதாவாகிய தேவனே, இதைச் செய்ய நாங்கள் அறிந்திருக்கிற ஒரே ஒரு வழி தான் உண்டு, அதாவது, அது உம்மை சந்திக்க ஆயத்தப்படுவது தான். சிறிது கழிந்து நாங்கள் எல்லாரும் அதைத்தான் செய்யப் போகிறோம் என்று உணருகிறோம். நாங்கள் ஏதோவொரு சமயத்தில் ஒரு நண்பனாக அல்லது பிள்ளையாக சமாதானத்தில் அதை சந்திக்க வேண்டும் அல்லது ஒரு சத்துருவாக அதை சந்திக்க வேண்டும். கர்த்தாவே, உமக்கு சொந்தமான நேச பிள்ளைகளாக அதை சந்திப்பதைத் தவிர வேறு எதாகவும் அதை சந்திக்க வேண்டாம். இக்காரியங்களை அருளும், இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 14இன்று அதிகாலையில், நான் களைச் செடிகளை வெட்டிக் கொண்டிருந்த போது, நான் வேதாகமத்தில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தேன், அது இந்நேரத்தில் வாசிப்பதற்கு ஒரு நல்ல காரியமாக இருக்கும் என்று நினைத்தேன். மேலும் அது ஒரு... அது ஒருக்கால் மிக அதிகமாக அநேகரின் கவனத்தைக் கவருகிறதும் பொருத்தமானதுமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் நினைத்தேன்... வெறுமனே - வெறுமனே ஒரு சில நிமிடங்கள் பேசுவதற்கு அது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்தேன். நான் பரிசுத்த லூக்கா 18ம் அதிகாரத்திலிருந்து இதை வாசிக்க விரும்புகிறேன். நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களும் அதைக் குறித்து எழுதியிருக்கின்றனர். 18ம் அதிகாரம் 18ம் வசனம். அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். என்னைப் பின்பற்றிவா என்ற வார்த்தையைக் குறித்து நான் எண்ணிப்பார்க்கிறேன், நான் பத்தாயிரம் சிறு வாலிப பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருந்தாலோ அல்லது வெறுமனே என்னோடு (மட்டுமே) நான் பேசிக் கொண்டிருந்தாலோ, அது நான் கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த அறிவுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது ஒரு கட்டளையாக உள்ளது, 'என்னைப் பின்பற்றிவா' என்ற காரியமானது, எக்காலத்திலும் யாருக்காவது கொடுக்கிற, குறிப்பாக ஒரு வாலிப நபருக்குக் கொடுக்கிற மிகப்பெரிய காரியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 15நீங்கள் யாரோ ஒருவரைப் பின்பற்றப் போகிறீர்கள். இப்பொழுது, நீங்கள் அப்படியே... உங்களால் அதை நினைவுகூர முடியும். நீங்கள் யாரோ ஒருவரைப் பின்பற்றப் போகிறீர்கள். நீங்கள் அந்த நபரைப் பின்பற்றும் விதத்தில், நீங்கள் பின்பற்றுகிற அந்த நபர் யார் என்பதைக் குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள். புரிகிறதா? நாம்... பவுல் ஒருசமயம், 'நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்' என்று கூறினான் (1 கொரி. 11:1, 1 கொரி. 4:16). வேறு வார்த்தைகளில் கூறினால், 'நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்.' 16இப்பொழுது, நாம் எல்லாருமே இந்தத் திருப்பு முனையில், ஜீவியத்தின் இந்த - இந்தக் கட்டத்தில் வந்திருக்கிறோம். அநேக சமயங்களில் நான், 'ரிக்கி, ரிக்கெட்டா' என்று உரக்க சத்தமிடுவதையும் காரியங்களையும் கேட்டிருப்பீர்கள். அது, அது இக்காலமாகும். அது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இக்காலமாகும். அது உண்மையாகவே அந்த ஜனங்களல்ல. அந்த ஜனங்கள் நம்மைப் போன்ற ஜனங்கள் தான். கூடுதல் சக்தியும் வேகமும் கொண்ட இந்த மோட்டார் வாகனங்களைக் கொண்டு இங்கே வெளியிலுள்ள அந்த வாலிப பிள்ளைகள், தெருவில் மேலும் கீழும் ஓடி, அவர்கள் போகிற வழியிலேயே தொடர்ந்து போய்க் கொண்டிருந்து, சிகரெட்டுகளைப் புகைத்துக் கொண்டு, மதுபானங்களைக் குடித்துக் கொண்டு திரிகிறார்கள், மேலும் சிறு பெண் பிள்ளைகள் ஒழுக்கக் கேடாக உடையுடுத்துகிறார்கள், மற்றும் காரியங்களைச் செய்கிறார்கள், அந்த சிறு பெண்பிள்ளைகளும் பையன்களும் நம்மைப் போன்றவர்கள் தான். பாருங்கள்? அவர்களும் மனிதர்கள் தான். அவர்களும் நேசிக்கிறார்கள். அவர்களும் புசிக்கிறார்கள். அவர்களும் குடிக்கிறார்கள். அவர்களும் தூங்குகிறார்கள். அவர்களும் சுவாசிக்கிறார்கள். அவர்களும் மரித்தாக வேண்டும். அவர்கள் நம்மைப் போன்ற ஜனங்கள் தான். இருப்பினும் அவர்கள்... 17அவர்கள் ஒரு அசுத்த ஆவியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது தெரியாது. அது அந்த ஜனங்களின் நிமித்தமாக அல்ல, ஆனால் சில சமயங்களில், அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தின (அவர்கள் பின்பற்றின) ஏதோவொரு தலைவனின் நிமித்தமாக இருக்கலாம். இப்பொழுது, சிறு பெண்களும் பையன்களுமாகிய உங்களுக்கு அதைக் காட்டிலும் நன்றாகத் தெரியும். நீங்கள் அதை அறிவீர்கள். உங்களுக்கு அதைக் காட்டிலும் மேலானது கற்பிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு சிறந்த பெற்றோர்கள் உண்டு, அதைப் போன்ற ஒரு காரியத்தைச் செய்வதைக் காட்டிலும் சரியான பயிற்சி உங்களுக்கு தரப்பட்டுள்ளது. மேலானவைகளை நீங்கள் அறிவீர்கள். 18ஆனால் அவர்களுக்கோ அது தெரியாது, பாருங்கள், அவர்கள் போகிற சபைகள் நவ நாகரீக சபைகளாகும். அவர்கள் நவீன நடை, உடை, பாவனைகளைக் கொண்டுள்ளவர்கள். அவர்கள் - அவர்கள் வெறுமனே இந்நாளுக்காக ஜீவிக்கிறவர்கள், மிகவும் பிரபலமானவர்கள். ஓ, என்னே! என்ன... அவர்களுக்கு ஒழுக்கம் (ஒழுக்கக்கேடான காரியங்கள்) நல்லொழுக்கமாக ஆகிவிட்டன. புரிகிறதா? எனவே அவர்கள், என்ன... ஒருசமயம் நான் கூறினபடி, சமீபத்தில், இங்கே சோதோம் கோமோராவைக் குறித்த ஒரு படத்தில், அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்ட இந்த ஸ்திரீ லோத்தை நோக்கி, 'நீ ஒழுக்கக்கேடு என்று அழைப்பதை நான் நல்லெழுக்கம் என்று அழைக்கிறேன்' என்று கூறினதைக் கண்டேன். 19இயேசு, 'நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்' என்று கூறினார் (மத்தேயு 24:37, லூக்கா 17:26). எனவே நாம் மீண்டுமாக அதே நிலைக்கு திரும்பி வருகிறோம். நாம் ஒரு சில நிமிடங்களாக வாசித்துக் கொண்டிருந்த இந்த மனிதனைப் பார்ப்போம். அவன் சிறு வாலிப பிள்ளைகளாகிய உங்களைப் போல, ஒரு நல்ல வீட்டில் பிறந்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. அவன் நல்ல பெற்றோர்களால் வளர்க்கப்பட்டான். ஏனென்றால், இயேசு தேவனுடைய கட்டளைளை அவனுக்குக் கொடுத்த போது, அது அதை நிரூபித்தது. அவன், 'நான் இவைகளை என் சிறு வயது முதற்கொண்டு கைக்கொண்டிருக்கிறேன்' என்றான் (மத்தேயு 19:20, மாற்கு 10:20, லூக்கா 18:21). அவன் அதைக் கைக்கொண்டிருந்தான், கைக்கொண்டு வந்திருந்தான் என்பதை அது காண்பிக்கிறது. அவன் சரியான விதமாக வளர்க்கப்பட்டிருந்தான். அவன் வெறுமனே ஒரு சந்தர்ப்பவாதி (snatch-out) அல்ல. உங்களுக்குத் தெரியும், அவன் - அவன் சிறு வாலிப பிள்ளைகளாகிய உங்கள் எல்லாரையும் போன்று எது சரியென்று அறியும்படியாக வளர்க்கப்பட்ட ஒருவனாயிருந்தான். அவன் அநேகமாக தேவனுக்கு பயந்த ஒரு தாய்தகப்பனால் வளர்க்கப்பட்டிருந்தான், அவன் ஒரு சிறு பிள்ளையாக இருக்கும் போதே அவனுக்குச் சரியாகக் கற்பிக்கப்பட்டிருந்தது. நல்லது, அது நல்லது தான். 20ஒருக்கால், அவன் ஒரு சிறு குழந்தையாக இருக்கும் போதே, அவன் ஏதோவொரு நாளில் மகத்தான ஒரு மனிதனாயிருப்பான் என்று அவனைக் குறித்து அவனுடைய தாயார் பெரிய குறிக்கோள்களைக் கொண்டிருக்கலாம். அவனுடைய தகப்பனார் தம்மால் கூடுமான ஒரு கல்வியை அவனுக்குக் கொடுக்கும்படி அவனைப் பள்ளிக்கு அனுப்புவதற்காக செல்வத்தையும் பணத்தையும் செலவளித்திருந்தார். அவன் ஒரு நல்ல படிப்போடு வெளியே வந்து, உலகத்திலுள்ள ஏதோவொன்றாக இருக்க முடிந்தது. இந்த தாய் தகப்பனின் உத்தமத்தைக் கொண்டு, இந்த சிறு பிள்ளைக்கு கல்வி கற்பிக்கப்பட்டது, ஒருக்கால் அவன் நீங்கள் இருப்பது போன்ற பட்டமளிக்கும் நேரத்திற்கு வந்திருப்பான், பாருங்கள், அவன் பள்ளிகளில் படித்து, கல்வி பயிலும் நேரத்தை அவன் கொண்டிருந்தான். அந்தத் தாய் தகப்பனின் ஜீவியத்திலே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் அவன் ஒருக்கால் இருந்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கு இருக்கும் வாகனங்களைப் (கார்களைப்) போன்று, அந்த நாட்களில், அவனுக்கு அருமையான குதிரைகள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் எல்லாரும் பெற்றிருக்கிறதைப் போன்று ஒரு நல்ல தகப்பனையும் தாயையும் அவன் பெற்றிருந்தான், அது அதைக் காண்பிக்கிறது, உங்களுக்கு இருக்கிற நல்ல வஸ்திரங்கள், மற்றும் உங்களுக்கு இருக்கிற ஒரு காரைப் போன்று அவனுக்கு இருந்தது... நீங்கள் இன்று வாழ்க்கையை அனுபவிக்கும்படி உங்களுக்கு இருக்கிற ஏதோவொன்றைப் போலவே அவனும் வாழ்க்கையை அனுபவித்தான். 21அந்தத் தகப்பனாரும் தாயாரும்... தங்களுடைய மகன் ஒரு சாதாரண மனிதனாக மாறி விடக்கூடாதென்றும், அவன் ஒரு அசாதாரண மனிதனாயிருக்க வேண்டும் என்றும் இடைவிடாமல் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தனர். எல்லா பெற்றோருமே அதை விரும்புவார்கள். இயேசு, 'உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக' என்ற அந்த கற்பனையை குறிப்பிடுவதை நீங்கள் கேட்டீர்களா, அதன்பிறகு அதை நிறுத்தி விட்டாரா? பாருங்கள்? அதுதான் எந்த பெற்றோர்களின் இலட்சியமாகவும் இருக்கும், தங்களால் கூடுமான சிறந்ததை தங்களுடைய பிள்ளைகளுக்குச் செய்யவும், அவர்களை கல்வி கற்க செய்யவும், ஒருக்கால் தங்களால் பெற்றுக் கொள்ளக் கூடாத காரியங்களை அவர்களுக்குக் கொடுக்கவும் எந்த பெற்றோர்களும் பேராவல் கொள்கின்றனர். என்னுடைய பிள்ளைகளைக் குறித்தும் நான் அந்தவிதமாகத்தான் உணருகிறேன். இப்பொழுது, பள்ளிகளுக்குப் போவதைக் குறித்து நான் சில சமயம் எண்ணுவதுண்டு; இந்த எல்லா காரியங்களும் நடந்து கொண்டிருக்கும் இடமாகிய இந்த உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் காரியங்களுக்குள் பெக்கியையும், சாராவையும், ஜோசப்பையும் அனுப்புவதைக் குறித்து எண்ணிப்பார்க்கிறேன்? நான் அவர்களை அழைத்து வந்து, அந்த மலைப்பாங்கான இடங்களுக்குள் கூட்டிச் சென்று, இந்தியர்கள் ஜீவிப்பது போன்று அங்கே அவர்களை வளர்க்கலாமே என்று எண்ணினேன். ஆனால் இங்கே தான் அது உள்ளது. அந்த சிறு பிள்ளையினிடத்தில் இருக்கிற காரியமானது வெளியே வரப்போகிறது. அது எங்கிருந்தாலும் காரியமில்லை, அது பெற்றிருக்கும் காரியமானது வெளியே வரத்தான் போகிறது. அங்கே உள்ளே பொல்லாத காரியம் இருக்குமானால், அது இந்தியர்களின் முகாமிலும் வெளியில் வந்து விடும். அங்கே உள்ளே நற்காரியம் இருக்குமானால், அதுவும் எந்த தங்கும் இடத்திலும் வெளியில் வரும். புரிகிறதா? அது அந்த பிள்ளைக்குள் என்ன இருக்கிறது என்பதாயுள்ளது, அது அந்த பிள்ளை எதனால் உண்டாக்கப்பட்டுள்ளது என்பதாயுள்ளது, அது உனக்குள் என்ன இருக்கிறது என்பதாயுள்ளது. அநேகமாக நீங்கள் இப்பொழுது எப்படியிருக்கிறீர்களோ, அதுதான் உங்களுடைய மீதமுள்ள ஜீவியத்திலும் இருக்கும். நீங்கள் ஒரு திருப்பு முனையில் இருக்கிறீர்கள். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்துவில் 86 சதவீத மனமாற்றங்கள் 21 வயதிற்கு முன்னர் ஏற்படும் மனமாற்றங்கள் தான். கிறிஸ்துவுவிடம் வருகிற 86 சதவீதம் பேர்கள், 21 வயதிற்கு முன்னரே வருபவர்கள் தான். நீங்கள், அந்த வயதை நீங்கள் கடந்த பிறகு, நீங்கள் அதிகமாக குறிப்பிட்ட வடிவில் உருவாகி (molded) விடுகிறீர்கள் அல்லது உங்கள் வழிகளில் இறுகி பொருத்தப்பட்டு விடுகிறீர்கள். ஓ, அது சம்பவிக்கக் கூடிய காரியம் தான், நிச்சயமாக. அவர்கள் எழுபது, எண்பது வயதுகளிலும் கிறிஸ்துவிடம் வருகிறார்கள், ஆனால் அது மிகவும் அரிதான காரியமாக உள்ளது. பாருங்கள்? நீங்கள் வாலிப பிள்ளைகளாக இருக்கும் போதே உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்றும், உங்களுடைய ஜீவியத்தில் என்ன சாதிக்க முயற்சிக்கிறீர்கள் என்றும் உங்களுடைய குறிக்கோள்களை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதைக் குறித்து சிந்தியுங்கள். நீங்கள் சிந்திக்கும் போது, நிச்சயமாகவே, உங்களுடைய சிந்தையானது - அது உங்கள் சிந்தைக்குள் அறியப்படாத ஏதோவொன்றால் கொண்டு வரப்படுகிறது - அதுவே உங்கள் சிந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதன்பிறகு அது உங்கள் சிந்தைக்குள் உண்டாகும் போது, பின்பு அதை நீங்கள் பேசுகிறீர்கள், அதைத்தான் நீங்கள் செய்யப் போகிறீர்கள். அதன்பிறகு உங்கள் குறிக்கோள்களானது அதற்கு உங்களை நடத்துகிறது. 22எனவே, அந்த தகப்பனும் தாயும் கூட இந்த வாலிபனைக் குறித்து எதிர்பார்ப்போடு இருந்தார்கள், அவனுடைய குறிக்கோள்களானது பெரியதும், அதை சாதிக்கும்படியாக போதுமான பணத்தை பெறுவதுமாக இருந்தது. அதன்பிறகு, இந்த - இந்த வாலிபன் தக்கதருணத்தைப் பெறும்படியாக ஜெபித்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் பாருங்கள், அவர்கள் - அவர்கள் தங்களால் கூடுமான எல்லாவற்றையும் செய்திருந்தனர். அவர்களுக்கு அருமையான குதிரைகள் இருந்திருக்கலாம், மேலும் - மேலும் அவன் ஒருக்கால் பெண்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவனாயிருந்திருக்கலாம். மனிதனை எது தொடருகிறதோ, அதுவே ஸ்திரீகளையும் தொடருகிறது, இதற்கு நேர்மாறாகவும் அவ்விதமே உள்ளது, பாருங்கள், ஏனென்றால் நாம் மனிதர்களுடைய ஜீவியத்தைக் குறித்தும், ஆத்துமாக்களைக் குறித்தும், மனிதர் ஸ்திரீகள் இருவரைக் குறித்துமே பேசிக் கொண்டிருக்கிறோம். மேலும் அதன்பிறகு, அந்த வாலிபன் பெற்றிருந்த இந்த எல்லா நல்வாய்ப்புகளுக்கும் பிற்பாடு, பாருங்கள், அவன், 'சொகுசான வீதி' என்று நாம் அழைக்கிற, ஓரிடத்தில் இருந்தான், அங்கே அதிகமாக எதைக் குறித்தும் அவன் கவலைப்பட வேண்டியதாயிருக்கவில்லை. அவனுடைய பெற்றோர்களிடம் பணமிருந்தது. அவனிடம் இருந்தது... அவன் மிகவும்... அவன் ஒரு தலைவனாக (ruler) ஆனான். அவன் வாலிப, பணக்கார வாலிப தலைவனாயிருந்தான் என்று வேதாகமம் அதை இங்கே குறிப்பிடுகிறது... மேலும் நாம் பார்க்கிறோம்... அவன் ஒருக்கால் வாலிப வயதைக் கொண்டிருக்கலாம், அவன் டீன்ஏஜ் வாலிபனாகவும், அப்போது தான் பள்ளிப்படிப்பை விட்டு வெளியே வந்தவனாகவும், அப்போது தான் பட்டம் பெற்றவனாகவும், (ஒருக்கால் சில வாரங்களுக்கு முன்போ அல்லது ஏதோவொன்றாக) இருந்திருக்கக்கூடும், அவன்... ஆனான். அவன் ஒரு தலைவனாக இருந்தான், அவன் இருதயம் வாஞ்சித்த யாவுமே அவனிடம் இருந்தது. 23அந்த வாலிப பையன் நவீன ரிக்கியாக இருக்கவில்லை. அவன் ஒரு அருமையான பையனாயிருந்தான். லூக்கா அதைக் குறித்து எழுதும் போது, அல்லது மாற்கு அதைக் குறித்து எழுதும் போது, அது மாற்கு தான் என்று நம்புகிறேன், இயேசு அவனிடத்தில் அன்புகூர்ந்த காரணத்தால், அவனை நோக்கிப் பார்த்து பெருமூச்சு விட்டார் (sighed) என்று எழுதப்பட்டுள்ளது என்று நம்புகிறேன். பாருங்கள்? அந்த வாலிபனைக் குறித்து ஏதோவொன்றிருந்தது. அந்த வாலிபனிடம் ஒரு அருமையான நற்பண்பு இணைந்திருந்தது. அவன் எங்கிருந்து வந்திருக்கிறான்? தேவனுடைய கற்பனைகளை அவனுக்குப் போதித்து, அவன் அவைகளை கைக்கொள்கிறானா என்று பார்க்கிற ஒரு அருமையான குடும்பத்திலிருந்து அவன் வந்திருந்தான். அவன் சிறு வயது முதற்கொண்டே கற்பனைகளைக் கைக்கொண்டு வந்திருந்தான். அந்த வாலிபனுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது; அவன் நித்திய ஜீவனை விரும்பினான். அவன், 'நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான் (மத்தேயு 19:16, மாற்கு 10:17, லூக்கா 18:18). 24பாருங்கள், இந்த உலகத்தில் நீங்கள் பெற்றிருக்கிற எல்லாமே இருப்பினும், உங்களுக்குள்ளிருக்கிற ஆத்துமா நீங்கள் பெற்றிராத, உங்களுக்கு அவசியமான ஏதோவொன்றுள்ளது என்று உங்களிடம் கூறுகிறது. வெறுமனே செல்வத்தின் மூலம்... அல்லது செல்வம் எப்போதும் இருக்காது. அது அழகாகவும், பிரபலமாகவும் இருக்கிற ஏதோவொரு சிறு பெண்ணாக இருக்கலாம், அவள் அழகாயிருப்பதாக எண்ணிக்கொள்ளுகிற அழகை அவள் பெற்றிருக்கலாம். அவள் ஒருக்கால் பள்ளியிலேயே மிகவும் பிரபலமானவளாக இருக்கலாம். ஒருக்கால் தான் விரும்புகிற எந்த சிறு பெண்ணையும் அடையக்கூடிய பையனாக அது இருக்கலாம். அவன் ஒருவிதமாக பாதுக்காப்பாக இருப்பதாக உணரலாம். அது பாதுகாப்பல்ல. அது வயல் நிலத்திலுள்ள பூவைப்போல வாடி வதங்கிப் போய் விடும். பாருங்கள்? அது போய்விடும். அது அதிக காலம் நீடிக்காது. சூரியனானது வெறுமனே ஒருசில தடவைகள் சுற்றிவரும் போதே, அது வாடி வதங்கிப் போய்விடும், அதன்பிறகு, நித்தியமாக ஜீவிக்க வேண்டிய ஒரு ஆத்துமா உங்களிடம் உள்ளது. 25இந்த வாலிப பையனிடம் ஒரு அருமையான நற்பண்பு இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவன் கர்த்தராகிய இயேசுவுக்கு தன்னையே ஒப்புக்கொடுத்தான் என்பதை அவன் தன்னுடைய முழங்காலில் விழுந்து பணிந்து கொண்டான் என்பதிலிருந்து அறிகிறோம். அவன், 'நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அவர், 'தேவன் ஒருவர் மாத்திரமே நல்லவர் என்று நீ அறிந்திருக்கும் போது, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?' என்றார். பாருங்கள்? அந்த வாலிபன் இதில் எதை வெளிப்படுத்தினான். அவரே தேவனாயிருந்தார் என்பதை வெளிப்படுத்தினான். புரிகிறதா? அவர், 'நீ கற்பனைகளை அறிந்திருக்கிறாயே. அவைகளைக் கைக்கொள்' என்றார். அவன், 'போதகரே, எந்த கற்பனைகளை?' என்று கேட்டான். அவர், ''உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக' என்ற கற்பனையையும், மற்ற கற்பனைகளையும்' என்றார். அவன், 'இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன். நான் இதை செய்திருக்கிறேன் என்பதைப் பாரும்' என்றான். அவர், 'இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவுண்டு. நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடுத்து விட்டு, என்னைப் பின்பற்றி வா' என்றார். என்னவொரு தருணம்! பேதுரு, யாக்கோபு, அல்லது யோவானோடு அவனும் கூட அவர்களில் ஒருவனாக இருக்க முடியும். பாருங்கள், அந்த வாலிபனுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு சரியான விதமாக வளர்க்கப்பட்டிருந்தான், அவனை உபயோகப்படுத்துவதற்காக அவன் தன்னை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்திருந்தான். அவனிடமிருந்த உள்ளார்ந்த ஆற்றல்கள் யாவற்றையும் உபயோகப்படுத்துவதற்கு, அநேகமாக (தன்னுடைய) பள்ளிப்படிப்பைக் கொண்டும், வாலிப வயதைக் கொண்டும், ஜசுவரியத்தைக் கொண்டும், செல்வாக்கைக் கொண்டும் அவனால் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ண முடியும், இருப்பினும் அவன் அதைப் புறக்கணித்து விட்டான். அந்த வாலிப பையனுக்கு நேர்ந்த காரியம் என்னவொரு - என்னவொரு கசப்பான (rashal) காரியமாக உள்ளது! பாருங்கள்? 26'எனனைப் பின்பற்றிவா.' இப்பொழுது, பாருங்கள், அவன் யாரோ ஒருவரைப் பின்பற்ற வேண்டியிருந்தது. இப்பொழுது, அவன் சேர்ந்திருந்த அந்த ஜனங்களுடைய செல்வாக்கையோ, ஏதோவொரு வாலிப பெண்ணின் செல்வாக்கையோ, அவன் சேர்ந்திருந்த ஒரு கூட்டம் பையன்களுடைய ஏதோவொரு செல்வாக்கையோ, பள்ளியில் இருந்த அவனுடைய சக மாணவர்களையோ, அல்லது இயேசு கிறிஸ்துவையோ பின்பற்ற வேண்டியிருந்தது. அவனுக்கு எல்லா நற்குணங்களும் இருந்த போதிலும் அவனிடம் நித்திய ஜீவன் இல்லை என்பதை அவன் அறிந்திருந்தான். பிள்ளைகளே, நீங்கள் அதைக் குறித்துத் தான் சிந்திக்க வேண்டும். பாருங்கள்? இப்பொழுது, இன்றிரவு அந்த வாலிபனைக் நோக்கிப் பாருங்கள், அவனால் என்னவாக இருக்க முடிந்தது, அவன் என்னவாக இருக்கிறான், இன்றிரவு அவன் என்னவாக இருக்கிறான் என்பதைப் பாருங்கள். அவன் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறான். அவன் ஒரு மனிதனாக இருந்தான். அவன் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறான். அவன் நியாயத்தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அந்த நாளில் நியாயத்தீர்ப்பை முகமுகமாய் எதிர்கொள்ளும்படி காத்துக் கொண்டிருக்கிறான், அவன் புறக்கணித்த அதே நல்ல தருணம் வாலிப பிள்ளைகளாகிய உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஏறக்குறைய அதே சூழ்நிலையில் அதே வாய்ப்பு கொடுக்கப்படுகிறது; நீங்கள் அருமையான வாலிப பிள்ளைகள், நற்பண்புகள் உள்ளவர்கள், உங்களுக்கு அருமையான தகப்பன்மார்களும் தாய்மார்களும் உண்டு, நீங்கள் விரும்பினாலொழிய வேலை செய்ய வேண்டியது கூட இல்லை. பாருங்கள்? 27ஆனால் அதனோடு கடந்து செல்லுகிற வேறு ஏதோவொன்றுள்ளது. ஏதோவொன்று அதனோடு கூட போகிறது. இன்றிரவு, அந்த வார்த்தையானது ஒருபோதும் மரித்துப் போகவில்லை. 'என்னைப் பின்பற்றிவா' என்ற வார்த்தையானது இன்னுமாக ஒவ்வொரு வாலிபனுக்கும், ஒவ்வொரு வாலிப பெண்ணுக்கும் ஒரு சவாலாக இருக்கிறது. பாருங்கள்? வார்த்தைகள் மரிப்பதில்லை. நீங்கள் எப்பொழுதாவது எதையாவது பேசினால், சற்று ஞாபகம் கொள்ளுங்கள், அது உங்கள் காரினுள் வைத்து இரகசியமாக பேசினாலும், அது பிரசங்க பீடத்தில் பேசப்பட்டாலும், உங்கள் ஆண்நண்பருடனோ, அல்லது பெண்சிநேகிதியோடே தெருக்கோடியில் பேசப்பட்டாலும், அது எங்கு பேசப்பட்டாலும், அது ஒருபோதும் மரித்துப் போவதில்லை. அது - அது என்றென்றுமாக ஜீவித்தாக வேண்டும். 28நான் அந்த சிறு பெண்ணைக் கண்டபோது, நான்... அன்றொரு இரவு தரிசனத்தில், அந்த அழகான வாலிப பெண்ணாகிய ஹாலிவுட் நடிகையைக் கண்டேன், அவள் மரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன், உதவியைப் பெற்றுக் கொள்ளும்படியாக (ஏதோவொன்றை) அடைய முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவள் மாரடைப்பினால் மரித்துப் போனாள், அவள் தான் செல்வி மன்றோ (Miss Monroe). அது இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த காரியமாகும், அவள் மரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். இரண்டு நாட்கள் கழித்து அவள் மரித்துப் போனாள். பிறகு, அன்றொரு இரவில், அந்த பெண்ணின் சத்தத்தை நான் கேட்டேன். எப்படி? சிறு பிள்ளைகள் என்னிடம், 'அப்பா, நீங்கள் திரும்பி வராத நதிக்கு (River Of No Return) எல்லா நேரமும் போகிறீர்களே. இவ்விதமாக அவர்கள் இன்றிரவு அதன் பேரில் ஒரு படக்காட்சியைப் போடுகிறார்கள்' என்று கூறிக் கொண்டிருந்தனர். அது ஒரு குறிப்பிட்ட இரவில் இருக்கும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு சமயத்தில். நான், 'நல்லது, நான் அதைக் காண விரும்புகிறேன், ஏனென்றால் நான் அந்த நதியில் இரண்டு அல்லது மூன்று முறை இருந்திருக்கிறேன்; ஏறக்குறைய ஐந்து தடவைகள் என்று நினைக்கிறேன்' என்று எண்ணினேன். நல்லது, நான் - நான் அதைக் காண விரும்பினேன். செல்வி மார்லின் மன்றொ அதில் நடித்திருந்தாள். நல்லது, அது தரிசனத்தில் நான் கண்ட பெண் தான். அவள் அங்கே அந்தப் படத்தில் இருந்தாள், மேலும் அந்த நடிப்புகள், திரும்பி வராத நதியில் அவள் நடித்திருந்த அதே நடிப்பு, அநேகமாக 15 வருடங்களுக்கு முன்பு, அவள் அந்த படத்தில் நடித்திருந்தாள். அது ஒரு பழைய படமாயிருந்தது, ஒருக்கால் 20 வருடங்களுக்கு முன்புள்ளதாக இருக்கலாம். அவள் மரித்து இரண்டு வருடங்களாகிறது. அவளுடைய ஒவ்வொரு நடிப்பும், ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன. புரிகிறதா? அது மீண்டும் ஜீவிக்கும் அளவுக்கு, அது இன்னுமாக காந்த ஒலிநாடாவில் கிரகித்துக்கொள்ளப்பட்டிருந்தது. 29அது மட்டுமல்ல, ஆனால் நாம் கூறுகிற யாவுமே ஜீவிக்கிறது. நாம் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் மரிக்க முடியாது. இப்பொழுது, இந்த அறையினூடாக வார்த்தைகளும், ஜனங்களின் வடிவங்களும் வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி அதைக் கிரகித்துக் கொள்கிறது. நீங்கள் சரியாக இங்கே பேசி விட்டு, அதே வினாடியில் உலகத்தைச் சுற்றிலும் உங்கள் சத்தத்தை அவர்களால் கேட்க முடியும். நீங்கள் அதை இந்த அறைக்குள் கூட கேட்பதற்கு முன்பே, அது மின்னணு முறையினால் உலகத்தைச் சுற்றிலும் போகிறது. 30மேலும் தேவனுடைய மகத்தான திரையானது அதை கிரகித்துக் கொள்கிறது. நீங்கள் அசைகிற ஒவ்வொரு அசைவும், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலும், நீங்கள் அதை நியாயத்தீர்ப்பில் சந்தித்தாக வேண்டும். புரிகிறதா? எனவே, வாலிப பிள்ளையே, அதை நிறுத்துவதற்கு இது ஒரு நல்ல காரியமாகும், இந்தக் காரியங்களைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், பாருங்கள், ஏனென்றால் நீங்கள் அதை மீண்டும் சந்திக்கப் போகிறீர்கள். புரிகிறதா? நாம் இந்த வாலிபனைக் குறித்தும், அவன் பெற்றிருந்த வாய்ப்புகளைக் குறித்தும் ஆராய்ந்து பார்ப்போம், அவனுடைய ஸ்தானத்தில் உங்களை நீங்களே பொருத்திப் பாருங்கள். பெக்கியைப் போலவும், மார்லினைப் போலவும் இருக்கிற ஒரு சிறு பெண்ணே, அவனுடைய ஸ்தானத்தில் நீ நின்று கொண்டிருந்தது போலவே, அதேவிதமாக, இன்னும் ஜீவிக்கிற அந்த சத்தத்தை உன்னால் கேட்க முடிந்தது. 31அது இன்னும் ஜீவிக்கிறது. அது இன்னும் அசைந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானமானது, 'இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அவர் பேசின அவருடைய சரியான சத்தத்தை இப்பொழுதிலிருந்து இருபது வருடங்களில் அவர்களால் கிரகித்துக் கொள்ள முடியும்' என்று கூறுகிறது. அது இன்னும் ஜீவிக்கிறது. கடலில் போடப்பட்ட ஒரு கூழாங்கல்லைப் போன்று, அந்த அலையானது ஒருபோதும் நிற்பதேயில்லை. அது ஆயிரக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து, கரையை அடைந்து, மீண்டும் திரும்பி வருகிறது. அதுபோலவே ஒரு சத்தமானது ஒருமுறை காற்றில் பேசப்படும்போது, அது ஒருபோதும் மரித்துப் போவதில்லை. நியாயத்தீர்ப்பில் உங்களால் எதையும் கூற முடியாது. அது சரியாக அங்கே இருக்கிறது. 'என்னைப் பின்பற்றிவா' என்று அந்த வாலிபனை அழைத்த இயேசு கிறிஸ்துவின் சத்தமானது அந்த திரையில் காட்டப்படும், அவன் அதைப் புறக்கணித்தது துக்ககரமானது, ஏனென்றால் அவன் அந்த மகத்தான உரிமையைக் கொண்டிருந்தான். பாருங்கள்? நாம்... எப்போதுமே அது பணமாக இருக்க வேண்டியதில்லை. அது வேறு காரியங்களாகவும் இருக்கலாம். பாருங்கள்? நாம் அந்த அழைப்புக்குச் செய்வதைக் காட்டிலும், நாம் மிக அதிகமாக நேசித்து, வைத்திருக்கிற எதுவுமே நமக்கு ஒரு பணத்தைப் போன்றே ஆகிவிடுகிறது, பாருங்கள். அது நம்மைக் கெடுக்கும் ஏதோவொன்றாக ஆகிவிடுகிறது. 32இப்பொழுது நாம் சிறிது அவனைப் பின்தொடர்ந்து போவோம். அவன் அதைப் புறக்கணித்த போது, என்ன சம்பவித்தது? அந்த கிறிஸ்துவின் சத்தத்திற்கு அவன் செவிகொடுக்கவில்லை. அவன் தன்னுடைய நண்பர்களோடு போய் விட்டான். வாலிப பிள்ளைகளே, நீங்கள் எலலாரும் அருமையான பிள்ளைகள், நீங்கள் நண்பர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டியது தான், ஆனால் நீங்கள் கொண்டிருக்கும் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கவனியுங்கள். அந்த நண்பன் கிறிஸ்துவைப் பின்பற்றிக் கொண்டிருந்தால், அந்த நண்பனோடு செல்லுங்கள். நீங்களும் கூட கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள். ஆனால் அவன் கிறிஸ்துவைப் பின்பற்றாதவனாகில், அவனோடு சேர்ந்து கொள்ள வேண்டாம். நாம் அவனைக் கவனிப்போம். அவன் அநேகமாக அவனுடைய நண்பர்களைப் பின்பற்றிப் போனான் என்பதை நாம் கண்டுகொள்கிறோம். அவன் ஒரு மகத்தான தலைவனாக ஆனான். அப்போது அவன் ஒரு மகத்தான தலைவனாயிருந்தான். அதன்பிறகு, அவன் - அவன் - அவன் தன்னுடைய பொருட்களை வைப்பதற்காக கூடுதலான களஞ்சியங்களைக் கட்ட வேண்டியிருந்த அளவுக்கு அவன் மிகவும் செழிப்படைந்தான் என்பதை நாம் காண்கிறோம். (லூக்கா 12:16-19) பிறகு அவன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான், அவனுக்கு வயது சென்ற பிறகு, வாலிப வயதின் கவலைகளும் காரியங்களும் கடந்து போய் விட்டன, எல்லாவற்றையும் அவன் செய்து விட்டான், ஒருக்கால் மகிழ்ச்சியாக பொழுதைப் போக்கியிருப்பான். 33என்னைப் போன்றோ, என்னுடைய மனைவியைப் போன்றோ, உங்கள் தாய்மார்கள் மற்றும் தகப்பனைப் போன்றோ இருக்கும் ஒரு வயதான மனிதனுக்கோ அல்லது ஒரு வயதான பெண்மணிக்கோ தாங்கள் சிந்திக்கக் கூடிய எதுவும் கடினமாக இருப்பதில்லை. வாலிப பையன்கள் மற்றும் வாலிப பெண்களாகிய உங்களைப் போன்று அவர்கள் வெளியே சென்று தெருக்களில் மேலும் கீழும் ஓட விரும்புவதில்லை, அதைச் செய்ய அவர்களால் முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுடைய மனைவி அல்லது உங்களுடைய கணவன் யாராக இருக்கப் போகிறார்கள் என்று (பார்ப்பதற்காக) வாலிப பையன்கள் மற்றும் பெண்களுடனான சந்திப்புகள், அல்லது, பாருங்கள், அவர்கள் தங்கள் சிந்தையில் அதைக் கொண்டிருப்பதில்லை. அவர்களுக்கு, அவர்களுக்கு பிள்ளைகள் உண்டு, அவர்கள் அதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். நாளை, நாளைய தினம் ஒன்று இருக்குமானால், நீங்கள் எல்லாரும் அப்படியே இருக்கப் போகிறீர்கள். புரிகிறதா? மேலும் இந்த வாலிபனைப் பாருங்கள், அதன்பிறகு, ஒருக்கால்... அவன் ஒருக்கால் விவாகம் கூட பண்ணியிருக்க மாட்டான். ஆனபோதிலும, அவன் ஒரு மகத்தான தலைவனாயிருந்தான். மேலும் அவன்... மேல் உட்கார்ந்திருந்தான். இன்றும் எருசலேமில் இன்னும் கூட அவர்கள் வீட்டின் மேலிருந்து (housetop) புசிக்கிறார்கள், இந்நாளிலும் சாயங்கால நேரத்தில் வெளியில் குளிர்ச்சியாயிருக்கும் போது, அவ்வாறு செய்கிறார்கள். மேலும் அவனோடு வேறொரு கதாபாத்திரம் நம் மனக்கண் முன்பாக கொண்டு வரப்படுகிறதைக் காண்கிறோம்: அவன்தான் ஒரு பிச்சைக்காரன். (லூக்கா 16: 19-31) 34அடுத்திருப்பவனைக் கனம்பண்ண வேண்டுமென்று (கற்பிக்கப்பட்டு) அவன் வளர்க்கப்பட்டிருந்தான், பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டுமென்றிருப்பதை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். பாருங்கள், கிறிஸ்துவின் அந்த அழைப்பை அவன் புறக்கணித்ததன் மூலமாக, இறுதியில்... அதைப் போன்று காணப்பட்ட அவ்விதமான ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டிருந்த ஒரு வாலிபனுடைய, பிறரைக் கனம் பண்ணுகிற குணமானது அவனை விட்டு ஒருபோதும் அகன்று போயிருக்காது. ஆனால் அது அவனை விட்டுப் போய் விட்டது. அது போய் விட்டது. லாசரு என்ற பெயருடைய ஒரு மனிதன் வாசலருகே படுத்திருந்து, அவனிடம் உணவுக்காகப் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான், (ஆனால்) அதனால் பயனில்லாமல் போயிற்று. பெருக்கி போடப்பட்ட துணிக்கைகளை அவன் புசித்துக் கொண்டிருந்தான், அது அந்தப் பிச்சைக்காரனுக்குப் போடப்படுவதல்ல, ஆனால் நாய்களுக்கு போடப்படுவதைத் தான் அவன் புசித்தான். அவன் பருக்கள் நிறைந்தவனாய் இருந்தான். ஆனால் அந்த மனிதனோ (ஐசுவரியவான்) சமுதாயத்தில் மிகவும் மெருகேற்றப்பட்டு பளபளப்பாயிருந்தான், ஆகையால் அவனுக்கு அதற்கு மேலும் எந்த பரிதாபமும் இல்லாதிருந்தது. அவன் உணர்வற்று விறைத்துப் போனவனாயிருந்தான், ஏனென்றால் கிறிஸ்து கொடுத்த அந்த உரிமை சலுகையை அவன் புறக்கணித்திருந்தான். ஒருக்கால் ஒரு சாயங்கால நேரத்தில், அருமையான ஒயின் மதுபானங்களோடு தன்னுடைய மது விருந்தை (toast) அனுபவித்துக் கொண்டிருந்திருப்பான், விலையுயர்ந்த அணிகலன்களை அணிந்திருந்த அழகான பெண்களும், அதைப் போன்ற காரியங்களும் அவனைச் சூழ இருந்தனர், அவனுடைய இருதயம் வாஞ்சித்த எல்லாவற்றைக் கொண்டும் மதுவிருந்து நடந்து கொண்டிருந்தது. அந்த பிச்சைக்காரனோ வாசலருகே படுத்துக் கொண்டிருந்தான். அடுத்த நாள் காலையில், விடியற்காலம் வருவதற்கு முன்பே, அவன் நரகத்தில் இருந்தான், லாசரு வந்து தன்னுடைய நாவில் தண்ணீர் தர வேண்டும் என்று கதறி சத்தமிட்டுக் கொண்டிருந்தான். காட்சியோ மாறி விட்டது. 35அவன், 'தகப்பனாகிய ஆபிரகாமே' என்று கூறுவதைக் கவனியுங்கள், இப்பொழுது, ஆபிரகாம் யூதர்களின் தகப்பன் என்பது அவனுக்கு அப்பொழுதும் ஞாபகம் இருந்தது. அவன், 'தகப்பனாகிய ஆபிரகாமே, அந்த பிச்சைக்காரனாகிய லாசருவின் விரல்களில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வந்து, என் நாவில் வைக்கும்படி அவனை அனுப்பும். இந்த அக்கினி ஜூவாலை வேதனையாயுள்ளது' என்றான். மேலும் அவன் கூறினான்... ஆபிரகாமோ, 'இது, என்னால் அதைச் செய்ய முடியாது' என்று அநேக வார்த்தைகளில் கூறினான். 'இவை எல்லாவற்றையும் தவிர, உன்னுடைய ஜீவியத்தில் உனக்கு தருணமிருந்தது என்பதை பார்.' அவனுக்கு எப்போது அந்த தருணம் இருந்தது? இயேசு, 'என்னைப் பின்பற்றிவா' என்று கூறினபோது. ஆனால் அவன் அதைப் புறக்கணித்து விட்டான். அவன் பணம் சம்பாதிக்கக்கூடிய வழியில் போய் விட்டான். அது சரிதான், பணம் சம்பாதிப்பதில் தவறொன்றுமில்லை, ஆனால் நீங்கள் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் போதே இயேசுவைப் பின்பற்றுங்கள். புரிகிறதா? அவனோ ஜனக்கூட்டத்தினரோடு வேறொரு வழியில் போய் விட்டான். அவன் கூறினான், ஆபிரகாம், 'அதுவுமல்லாமல், எந்த மனிதனும் ஒருபோதும் கடந்து வரக்கூடாதபடிக்கு உனக்கும் அவனுக்குமிடையே ஒரு பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது, எந்த மனிதனும் ஒருபோதும் கடந்து வரவே மாட்டான். அங்கேயிருக்கிறவர்கள் இங்கே வர முடியாது, இங்கிருக்கிறவர்கள் அங்கேயும் போக முடியாது. அந்த பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது. எந்த மனிதனும் கடந்து வந்ததில்லை, அல்லது கடந்து வரப்போவதுமில்லை' என்று கூறினதை நீங்கள் கண்டுகொள்ளுகிறீர்கள். 36அதன்பிறகு அவனைக் கவனியுங்கள். அவன் அப்போது ஒரு சுவிசேஷகனாக இருக்க விரும்பினான். அவன் ஒரு வாலிபனாயிருக்கையில், இயேசு தம்மைப் பின்பற்றும்படி அவனுக்கு கொடுத்திருந்த அழைப்பு, ஒரு ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும் என்று அவன் கொண்டிருந்த அழைப்பு அவனிடம் மீண்டும் திரும்பியது. அவன் அதை நினைவுகூர்ந்தான், அவனுக்கு ஐந்து சகோதரர்கள் மீண்டும் பூமியில் இருந்தார்கள், அவர்கள் அந்த இடத்தில் போக அவன் விரும்பவில்லை. அவன், 'அப்படியானால், என்னுடைய சகோதரர்களும் இந்த வழியில் வரக்கூடாது என்று கூறும்படி லாசருவைத் திரும்ப அனுப்பும்' என்றான். வேறு வார்த்தைகளில் கூறினால், ''என்னைப் பின்பற்றிவா' என்ற அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படி.' பாருங்கள்? ஆனால் ஆபிரகாமோ, 'அவர்கள், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்றான். அவன், 'ஆமாம், லாசருவைப் போல மரித்தோரிலிருந்து ஒருவன் உயிர்த்தெழுந்து திரும்பிச் சென்று அவர்களிடம் கூறினால், ஏற்றுக் கொள்வார்கள்' என்றான். நீங்கள் பாருங்கள், நாம் மரித்த பிறகும், அப்பொழுதும் நீங்கள் சுயநினைவுடையவர்களாய் இருக்கிறீர்கள் என்பதை அது காட்டுகிறது. அவன் அதை நினைவுகூர்ந்தான். ஆபிரகாமோ, 'மகனே, உன்னுடைய நாட்களில் நடந்ததை ஞாபகம் கொள்' என்றான். புரிகிறதா? உங்களுக்கு அப்பொழுதும் ஞாபகம் இருக்கும். நீங்கள் உங்கள் நினைவை இழந்து போவதில்லை. உங்களுக்கு ஞாபகம் இருக்கும். மனிதன் கொண்டிருக்கக்கூடிய ஞாபகங்கள் அப்பொழுதும் அதேவிதமாக இருக்கும், 'என்னைப் பின்பற்றி வா' என்று இயேசு கூறினதை அவன் கேட்டிருந்த அத்தருணத்தை அவன் நினைவுகூர்ந்தான். ஆனால் அவனோ தவறான ஆளைப் பின்பற்றிப் போனான், தவறான கூட்டத்தைப் பின்பற்றினான். அவன் தவறான கூட்டத்தில் சேர்ந்து கொண்டு, தவறான இடத்திற்குப் போய், தவறான நித்தியத்தில் முடிந்து போனான்; அந்நாளில் அவன் தேவனிடமிருந்து என்றென்றுமாக நிர்மூலமாக்கப்படுவான். 37மேலும் இயேசு குறிப்பிடத்தக்க மகத்தான ஒரு வார்த்தையைக் கூறினார், 'மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்து போனாலும், அவர்கள் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணம் உண்டு, அவர்கள் அதற்கு செவி கொடுக்காவிட்டால், ஒருவன் மரித்தோரிலிருந்து எழுந்து போனாலும் செவி கொடுக்க மாட்டார்கள். அவர்கள் நம்ப மாட்டார்கள்' என்றார். ஏன்? ஏன்? நியாயப்பிரமாணம் அவ்விதமான ஏதோவொன்றைக் கூறினதா? ஆம். 'பிறர் உங்களுக்கு எப்படி செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.' (லூக்கா 6:31) அவன் நியாயப்பிரமாணத்தின் கீழாக ஜீவித்திருந்தான். ஆனால் அவனோ அந்த பிச்சைக்காரனை வாசலருகே மரித்துப்போக விட்டு விட்டான். பாருங்கள்? அவன் - அவன் தேவனுடைய கற்பனைகளின் கீழாக ஜீவித்திருந்தான், இருப்பினும் அந்த மகத்தான நித்திய ஜீவனைக் காணத் தவறி விட்டான். 38வாலிப பிள்ளைகளே, நீங்கள் ஒவ்வொருவரும் என்னைப் போன்று காணப்படுகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே என்னுடைய குமாரரையும் குமாரத்திகளையும் போன்று காணப்படுகிறீர்கள். ஒருவிதத்தில் நீங்கள் அவ்வாறு தான் இருக்கிறீர்கள், பாருங்கள், ஆவிக்குரியபிரகாரமாக பேசிக் கொண்டிருக்கிறேன். அது உண்மை. தேவனாகிய கர்த்தர் உங்கள் ஆத்துமாக்களை என்னுடைய பாதுகாப்பில் வைத்திருக்கிறார், ஏனென்றால் நீங்கள் வந்து எனக்குச் செவி கொடுக்கிறீர்கள். நீங்கள் என்னை நம்புகிறீர்கள். பாருங்கள்? ஒரு விதத்தில், நீங்கள் என்னுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். அது உண்மை. தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுதல் என்பது ஒரு மகத்தான காரியம் என்பதை எப்போதுமே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல வீட்டில் வளர்க்கப்படுவது என்பது தேவனிடமிருந்து வருகிற ஒரு சுதந்தரம் (heritage). உங்களுக்கு இருப்பதைப் போன்று நற்பண்புகளுடன் கூடிய அருமையான வாலிப பிள்ளைகளாய் இருப்பதென்பது நல்லது. கல்வியைப் பெற்றுக் கொள்வதென்பது அற்புதமானது. இந்த சுதந்திரமான தேசத்தில் ஜீவிப்பது கூட அற்புதமானது தான். நாம் அநேக காரியங்களுக்காக நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளாத ஒரு காரியம் உண்டு. நீங்கள் அதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். அதுதான் நித்திய ஜீவன். இயேசுவைப் பின்பற்றுவதன் மூலமும், ஒரு மறுபடியும் பிறந்த அனுபவத்தின் மூலமும் மாத்திரமே உங்களால் அதைச் செய்ய முடியும். அதைப் புறக்கணித்து விடாதீர்கள். 39ஒரு தடவை நான் ஒரு மனிதனைக் குறித்த ஒரு சிறு கதையைக் கேட்டேன், ஓ, அவன் ஏழையாக இருந்தான். மேலும் அவன் - அவன் எப்போதுமே... விரும்பினான். அது ஒரு கற்பனை கதையைப் போன்ற ஒரு கதையாகும். ஆயினும் அது எப்போதுமே என்னுடைய மனதில் பதிந்த கதையாகும். ஒருநாள் அவன் ஒரு பூவைப் பறித்தான். அந்த பூவானது மந்திர பூவாகும் (magic). அந்தப் பூ அவனைப் பார்த்து, 'நீ வாழ்நாளெல்லாம் தரித்திரனாய் இருந்திருக்கிறாய். இப்பொழுது நீ என்ன விரும்பினாலும், அதைக் கேள், அது உனக்குக் கொடுக்கப்படும்' என்றது. அவன், 'அதோ அங்கேயிருக்கிற அந்த மலை திறக்கப்பட்டு, நான் அதற்குள் போய், அந்த மலையில் தங்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்' என்றான். 'நல்லது,' அது, 'நீ எங்கு போனாலும், உன்னோடு என்னை கொண்டு செல்ல வேண்டும். புரிகிறதா? நீ உன்னோடு என்னை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். எனவே, நான் எங்கிருந்தாலும், நீ விரும்புவதைக் கேட்கலாம்' என்றது. 40அவன் அந்த மலைக்கு நடந்து சென்றான், அந்த மலை திறந்து கொண்டது, அவன் உள்ளே சென்றான். அந்த கற்பனை கதை கூறுகிறபடி, அலமாரிகளில் தங்கமும், வைரங்களும் நிறைந்து காணப்பட்டன. அவன் அந்தப் பூவை ஒரு மேஜையின் மேல் அல்லது ஒரு பாறையின் மேல் வைத்தான். அவன் ஓடிச்சென்று, ஒரு மிகப்பெரிய இரத்தினக்கல்லை (gem) எடுத்து, 'நான் போய் இதை என்னுடைய நண்பர்களிடம் காண்பித்தாக வேண்டும். இப்பொழுது நான் ஒரு செல்வந்தன். இப்பொழுது என்னிடம் எல்லாமே இருக்கிறது. நான் இதைக் காண்பித்தாக வேண்டும்' என்றான். எனவே அந்தப் பூ அவனைப் பார்த்து, 'ஆனால் நீ முக்கியமான காரியத்தை மறந்து விட்டாய்' என்றது. இந்நிலையில் அவன் திரும்பவும் ஓடிச்சென்று, கைகளில் பொறுக்கி, 'நல்லது, ஒருக்கால் நான் - நான் ஒரு தங்கக்கட்டியையும், ஒரு வெள்ளிப் பாளத்தையும் எடுத்துக் கொள்வேன்' என்றான். அதன்பிறகு அவன், 'நான் எப்படி பணக்காரனாய் இருக்கிறேன் என்பதையும், என்னிடம் எல்லாமே இருக்கின்றன என்பதையும் அந்த ஜனங்களிடம் கூறும்படியாக, நான் - நான் வேகமாக வெளியேறிச் செல்வேன்' என்றான். அவன் கதவண்டை சென்றான், அந்த பூ அவனைப் பார்த்து, 'ஆனால் நீ முக்கியமான காரியத்தை மறந்து விட்டாய்' என்றது. அதன்பிறகு அவன் மீண்டும் திரும்ப ஓடிச் சென்றான். அவன், 'இங்கே உள்ளே எல்லாவிதமான வஸ்துக்களையும் நாம் காண்கிறோமே' என்று கூறிவிட்டு, அவன் இரத்தினக்கல் ஒன்றை எடுத்துக் கொண்டு, 'இந்த இரத்தினக்கல்லை எடுத்துக் கொண்டு நான் போய், இந்த மலை எம்மாதிரியான இரத்தினக்கல்லால் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று ஜனங்களிடம் காண்பிப்பேன், அதன்பிறகு நான் மீண்டும் இதற்குத் திரும்பி வரலாம்' என்றான். பாருங்கள்? அவன் வாசலுக்கு வெளியே போகத் தொடங்கினான், அந்த பூ கடைசி தடவையாக, 'நீ முக்கியமான காரியத்தை மறந்து விட்டாய்' என்றது. 'ஓ,' அவன், 'ஓ, வாயை மூடு' என்றான். பாருங்கள், 'முக்கியமான காரியத்தை மறந்து விட்டாய்' என்ற அக்காரியத்தை அதற்கு மேல் கேட்க அவனுக்கு விருப்பமில்லை. அவன் வாசலுக்கு வெளியே ஓடினான். அவன் வெளியே போனபோது, அந்தப் பூவானது உள்ளே இருக்கையில், கதவு அவனுக்கு பின்னால் மூடிக் கொண்டது. அந்த முக்கியமான காரியம் அந்த பூ தான். பாருங்கள்? அந்த பூ தான் முக்கியமானது. 41அநேக வருடங்களுக்கு முன்பு, நான் உங்கள் எல்லாரையும் போன்று, சிறு பையனாய் இருக்கையில், இங்கே பினிக்ஸ்-க்கு மேற்பகுதியில் கால்நடைப்பண்ணையில் இருந்தேன். அப்போது ஒரு துண்டு காகிதத்தில், கனிம வளத்தைத் தேடும் ஒருவரைக் குறித்தும் (கனிம வளத்தைக் குறித்தும்) போடப்பட்டிருந்ததை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது, இது நெடுகிலும் சாலைகள் கிடையாது, வெறுமனே சிறிய மணல் பாதை தான் இருந்தது. அவர்கள் இன்னும் இங்கே கனிம வளத்தைக் குறித்து அநேக ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த கனிம ஆராய்ச்சியாளர் இந்த இடத்திற்குள் வந்திருந்தார், அவர் திரளான செல்வத்தைக் கண்டு பிடித்திருந்தார், எதிர்பாராதவிதமாக திரளான தங்கத்தையும் கண்டுபிடித்திருந்தார். அவருடைய பாதையில் அவர் கண்டுபிடித்திருந்த ஒரு சிறு அறையில் அவர் தங்கியிருந்தார். அவரோடு ஒரு நாயையும் வைத்திருந்தார், அந்த நாய் வெளிப்புறத்தில் கட்டப்பட்டிருந்தது. அந்த இரவு வேளையில், இந்தத் தங்கத்தைப் பறித்துக் கொள்வதற்காக, கொள்ளைக்காரன் ஒருவன் (outlaw) அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அவர் தங்கத்தை அந்தப் பழைய ஸ்பானிஸ் சுரங்கங்களில் இருந்து கண்டுபிடித்து எடுத்திருந்தார், அவர் அதனோடு உள்ளே வந்திருந்தார். அந்த நாய் குரைக்கத் தொடங்கியது. அந்த நாய் தொந்தரவுபடுத்துவதை அம்மனிதர் விரும்பவில்லை. அவர், 'வாயை மூடு' என்றார். மேலும் அவர், 'நாளை இதை நகரத்திற்குள் எடுத்துக் கொண்டு போய் விடுவேன்' என்றார். அந்த சம்பவத்தின் நன்நடத்தை நீதி விஷயங்கள் (morals) இவைதான். 'நான் இதை நிறுத்துப் பார்த்து இதன் எடையை அறிந்து கொள்வேன், (பிறகு) ஒரு பணக்காரன் ஆவேன். நான் பெரிய கார்களையும் வாங்குவேன். நான் எல்லாவிதமான பெண்களையும் பெரிய பார்ட்டிகளையும் கொண்டிருப்பேன். நான் ஒரு பணக்காரனாய் இருப்பேன், ஏனென்றால் நான் ஏற்கனவே உரிமைகோரிப் பெறப்பட்ட பொருளைக் கண்டுபிடித்திருக்கிறேன். இங்கே என்னிடம் நிறைய தங்கம் உள்ளது' என்றான். மேலும், 'நான்... இருப்பேன்' என்றான். அவன் போய் தூங்க முயற்சிக்கையில், நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தது, ஏனென்றால் அந்தக் கொள்ளைக்காரன் (outlaw) பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருப்பதை அந்த நாய் பார்த்து விட்டது, அவன் இந்த கனிம ஆராய்ச்சியாளர் தூங்கப் போவதற்காகக் காத்துக் கொண்டிருந்தான். அவன் மீண்டும் எழுந்து, திரும்பவும் நாயைப் பார்த்து சத்தமிட்டு, 'வாயை மூடு' என்றான். அந்தப் பரிதாபமான நாய் ஊளையிட்டபடி, ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது - வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று தன்னுடைய எஜமானை எச்சரிக்கை செய்ய முயற்சித்தது. மேலும் அவன்... அடுத்த முறை அந்த நாய் குரைக்கத் தொடங்கின போது, அந்த கனிம ஆராய்ச்சியாளன் ஒரு சிறு துப்பாக்கியை எடுத்தான். அவனுக்கு தொந்தரவு ஏற்படுவதை அவன் விரும்பவில்லை, எனவே அவன் எழுந்து அந்த நாயைச் சுட்டுத் தள்ளினான். அந்தக் கனிம ஆய்வாளன் அந்த இரவில் அந்தக் கொள்ளைக்காரனால் கொல்லப்பட்டான். அவனுடைய ஆடம்பர கனவுகள் எல்லாம் அவனுக்கு நன்மை ஒன்றும் செய்யவில்லை. ஏன்? அவனை எச்சரிக்கை செய்து கொண்டிருந்த அந்த சத்தத்தை அவன் அடக்கிப் போட்டான். 42வாலிப பிள்ளைகளே, நீங்கள் வளர்க்கப்பட்ட விதமாக வளர்க்கப்பட்ட பிறகு, தவறான காரியத்தைச் செய்யாதே என்று ஏதோவொன்று கூறுவதை நீங்கள் உணருவது வரை, உங்களால் ஒருபோதும் தவறான எதையும் செய்ய முடியாது, யாருமே எதையும் செய்து பார்க்க அவர்களால் கூடாது. இப்பொழுது, உங்களை எச்சரிக்கை செய்யும் அந்த சத்தத்தை ஒருபோதும் அமைதிபடுத்தி அடக்கிப்போடாதீர்கள். இதை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள், 'என்னைப் பின்பற்றிவா' என்று கூறுகிற அந்த சத்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், அப்போது நீங்கள் எப்போதுமே சரியாக வெற்றி பெறுவீர்கள். நீங்கள் அவ்வாறு வெற்றி பெறுவீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் உங்களை நம்புகிறேன். ஆனால் இயேசுவாகிய, அந்த சத்தமானது இன்றிரவும் பூமியில் ஜீவித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதுமே ஞாபகம் கொள்ளுங்கள். நாம் பேசின ஒவ்வொரு சத்தமும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் ஜீவித்து, அந்தச் சத்தமானது காற்றில் ஈதர் அலையாக வெளியே போகிறது போல அதேவிதமாக... பாருங்கள், இதை வெளியே அனுப்ப இங்கே ஒரு ட்ரான்ஸ்மிட்டர் உங்களுக்கு உண்டு. அதை வெளியே அனுப்பும் ட்ரான்ஸ்மிட்டர் நீங்களே. இப்பொழுது அதை கிரகித்துக் கொள்ளும் வானொலி அல்லது தொலைக்காட்சி நிலையத்தை அது பெற்றிருக்கிறது. இயேசுவே தேவனுடைய வார்த்தையின் ட்ரான்ஸ்மிட்டராக (Transmitter) இருந்தார், அவர் ஒரே மனிதனில் வெளிப்பட்ட தேவனுடைய திரித்துவமாக (triunity) இருந்தார். அவர் முழுவதும் தேவனாகவும் முழுவதும் மனிதனாகவும் இருந்தார். 43அந்த ஒரே மனிதனாகிய, இயேசு கிறிஸ்துவில் பிரதிநிதித்துவமாயிருந்த பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக, தேவனுடைய திரித்துவமாகவும் (trinity of God), தேவனுடைய தன்மைகளின் திரித்துவமாகவும் (trinity of attributes of God) அவர் இருந்தார். எனவே அங்கே அவர் வார்த்தையாக இருந்தார். அவர், 'என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு' என்று கூறின ட்ரான்ஸ்மிட்டராக இருந்தார். புரிகிறதா? 'என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'. இப்பொழுது, அந்த வார்த்தையானது ஒரு ட்ரான்ஸ்மிட்டரிலிருந்து வெளியே போயிருக்கிறது. ஒரு நாளிலே, அவர், 'நீங்கள் இந்த மலையைப் பார்த்து: 'தள்ளுண்டு போ' என்று சொல்லி, நீங்கள் சொன்னபடியே நடக்கும் என்று உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீங்கள் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார். இப்பொழுது, நீங்கள் உங்களுக்குள்ளேயிருக்கிற ஏதோவொரு கட்டுப்படுத்தும் வல்லமை மூலமாக, விசுவாசத்தின் மூலமாக, நீங்கள் அப்படியே அதைக் கிரகித்துக் கொள்ளும் நிலையமாக இருக்கக் கூடுமானால், அது உங்களை சரியாக தேவனுடைய மண்டலத்திற்குள், புதிய பிறப்பிற்கு கொண்டு செல்லும், அப்பொழுது நீங்கள் மறுபடியும் பிறப்பீர்கள். அப்போது ஆபத்து நெருங்கி வரும்போது, உங்களை எப்போதும் எச்சரிக்கை செய்கிற அந்த சத்தத்தைக் கேட்பதற்காக, நீங்கள் எப்போதுமே தொடர்பில் இருப்பீர்கள். காரியங்கள் தவறாய் இருக்கும் போது, தவறாகப் போய்க் கொண்டிருக்கும் போது, அது எப்போதுமே உங்களை எச்சரிக்கை செய்யும். அப்படியானால், நாம் பேசிக் கொண்டிருக்கிற அந்தப் பணக்கார வாலிபனைப் போன்று ஏதோவொரு நாளில் இருப்பதற்குப் பதிலாக, அப்போஸ்தலனாகிய பேதுருவைப் போன்றோ, பவுலைப் போன்றோ அல்லது இயேசு கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிற யாரோ ஒருவரைப் போன்றோ நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் அதைச் செய்யுங்கள், வாலிப பிள்ளைகளே. நாம் ஜெபம் செய்யலாமா? 44கர்த்தாராகிய இயேசுவே! அங்கே நாளைய தினம் ஒன்று இருக்குமானால், இவர்கள் நாளைய தினத்தின் இளம் பருவத்தினரும், மனிதர்களும், பெண்களுமாய் இருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்தாக வேண்டும். நாளைய தினம் ஒன்று இருக்கும் என்பது போன்று அவர்களுக்குக் கற்பிக்கும் போது, நாங்கள் அந்த பாரத்தை உணருகிறோம். அங்கே நாளைய தினம் ஒன்று இல்லாமற்போனால், இன்றே அந்த தினமாக உள்ளது. அப்படியானால், பிதாவே, உம்முடைய பார்வையில் யாருமே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம். மாம்சமான எதுவும் மகிமையடைய முடியாது. ஒருக்கால் இந்தக் காரியங்கள் எவ்வளவு நன்றாக இருக்குமோ அவ்வளவு நன்றாக இருந்தாலும், பரிசுத்த ஆவியைத் தவிர தேவனுக்கு சாட்சி கொடுக்கக் கூடிய எந்த கல்வியும் கிடையாது, எந்த நற்கிரியைகளும் கிடையாது, எந்த மதசம்பந்தமான நிறுவனமும் கிடையாது, மனோதத்துவ சாஸ்திரமோ (phychology), எதுவுமே கிடையாது. நித்திய ஜீவனின் வடிவிலுள்ள தேவன் தாமே ஒரு தனிப்பட்ட நபராக எங்களிடம் வருகிற கருவியாக உள்ளார். நாங்கள் இதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். பேதுரு அந்த வாக்குமூலத்தை கூறினபோது, மெய்யாகவே அதை வெளிப்படுத்தினது. இயேசு அவனைப் பார்த்து, 'மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. நீங்கள் அதை ஒருபோதும் ஒரு வேதாகமக் கல்லூரியில் கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் ஒருபோதும் அதை ஏதோவொரு பள்ளியில் கற்றுக்கொள்வதில்லை' என்றார். அது ஒரு தனிப்பட்ட காரியம், ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் பெற்றுக் கொள்ள வேண்டிய ஏதோவொன்று. நீர், 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை' என்றீர். கர்த்தாவே, நாங்கள் அதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 45அந்த சத்தமானது இப்போதும் இன்றிரவும் ஜீவிக்கிறது. அங்கே இன்னும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய விசுவாசத்தின் இலக்குக் குறிக்கம்பங்களும் (posts), தொலைதூர நிலையங்களும் (outposts), இடைமறிக்கும் நிலையங்களும் (listening posts), அலைபரப்பை ஒலியாகவோ, ஒளியாகவோ மாற்றும் நிலையங்களும் (receiving stations) இருக்கின்றன. கர்த்தாவே, இந்தப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் அதை தங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அதை நினைவுகூரும், அவர்கள் செய்கிற நற்கிரியைகள் அல்ல, ஆனால் அவர்கள்... நாங்கள் செய்கிறவைகளின் மூலமாக தேவன் எங்களை நியாயந்தீர்க்கிறதில்லை, ஆனால் நாங்கள் எதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதின் மூலமாகவே எங்களை நியாயந்தீர்க்கிறார். நாங்கள் எங்கள் விசுவாசத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டோம், எங்களுடைய கிரியைகளின் மூலமாக அல்ல. எனவே பரலோகப் பிதாவே, அவர்கள் இப்பொழுது அந்தத் தரிசனத்தைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, 'என்னைப் பின்பற்றிவா' என்ற அந்த மகத்தான நித்திய அழைப்பை கண்டு, அதற்கு செவிகொடுக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகத்தின் எல்லா காரியங்களையும், இந்த நிலையற்ற சுற்றிலும் ஓரம்கட்டப்பட்ட (fringy) ஜீவியத்தையும் புறக்கணித்து விட்டு விடுவார்களாக. இன்றிரவு அவர்கள் இங்கு தங்களுடைய இளம் பொன்னிற தலை மயிரையும், அவர்களில் சிலர் கறுப்பு தலைமயிரையும், கருமை நிற கண்களையும், நீல நிற கண்களையும், உடையவர்களாய் அவர்கள் எப்பொழுதும் இருப்பதிலேயே தங்களுடைய மிகச்சிறந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். மகத்தான எழுத்தாளன், 'தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும், உனக்குப் பிரியமானதல்ல என்று நீ (சொல்லும்) வருஷங்கள் சேராததற்கு முன்னும், உன் வாலிப பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை' என்று கூறினது போன்று. கர்த்தராகிய இயேசுவே, நீர் எப்படியாக பேதுருவிடம், 'நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது, நீ எழுந்து நீ எங்கு போக விரும்பினாயோ அங்கு போனாய். ஆனால் நீ முதிர்வயதுள்ளவனாகும் போது, யாரோ ஒருவன் உன்னைக் கட்டி நீ போகாத இடத்திற்கு கொண்டு போவான்' என்றார். அவர்கள், 'இதுவே நாள். இதுவே நேரம்' என்பதை நினைவுகூருவார்களாக. இதை அளியும், பிதாவே. நான் இன்றிரவு இங்கேயுள்ள அவர்கள் ஒவ்வொருவரையும் என்னுடைய சொந்த பிள்ளைகளாக உரிமைகோருகிறேன், இங்கேயுள்ள ஒவ்வொரு பிள்ளைகளையும் உரிமைகோருகிறேன். அவர்களை கவனித்துப் பார்த்துக் கொள்வதற்காக நீர் என்னுடைய கரங்களில் கொடுத்திருக்கிறீர் என்று நான் உணருகிறேன். சாத்தானிடமிருந்தும், மரணத்திலிருந்தும், இயேசு கிறிஸ்துவின் ஜீவனுக்கு அவர்கள் எல்லாரையும் நான் உரிமைகோருகிறேன். ஆமென். 46பிள்ளைகளே, (தேவன்) உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களிடம் ஒரு சில வார்த்தைகளைக் கூறினது உண்மையிலேயே அருமையாக இருந்தது. பில்லி, நான் உன்னை திரும்ப அழைக்கிறேன். அருமையான பிள்ளைகளாகிய உங்களைப் பாராட்டுகிறேன். சகோதரன் ஃபிரட் அவர்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக.